• Feb 26 2025

தல குறித்த ரகசியத்தை சொன்ன அஜித்தின் மகள்..! என்ன தெரியுமா..?

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

என்னை அறிந்தால் ,விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா தற்போது தனுஷ் இயக்கத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் நடித்துள்ளார். நேற்று முன் தினம் இந்த படத்தின் trailor வெளியாகி அனைவரதும் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.


இந்த படத்தில் நடித்துள்ள 2k நடிகர்கள் எல்லா மீடியாக்களிலும் shine ஆகி வருகின்றனர். போட்டி போட்டு பேட்டி எடுத்து வரும் இந்த மீடியாக்களில் கொஞ்சமும் சலிக்காமல் நேர்காணல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோ பவிஷ் மற்றும் அனிகா ஆகியோர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.


குறித்த நேர்காணலில் அனிகாவிடம் உங்களை எல்லாரும் அனிகா என தெரிந்ததை விட அஜித் சார் பொண்ணா தான் தெரியும் அதை பற்றி என்ன நினைக்கிறீங்க என கேட்டதற்கு அவர் " இது எனக்கு கிடைத்த ஒரு பெரிய பாக்கியம் ஆக தான் நினைக்கின்றேன்." என கூறியுள்ளார்.


இதைவிட அஜித் சார் குறித்து யாருக்கும் தெரியாத ஒரு விடயம் சொல்லுங்க என கேட்டதற்கு " அவர் எப்பவுமே nokia போன் தான் use பண்ணுவார். ஏன் சார் என கேட்டதற்கு இது தான் எனக்கு comfortable என சொன்னார் " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement