• Jan 20 2025

விடாமுயற்சி டிரெய்லரின் வியூஸ் எத்தனை கோடி தெரியுமா? யூட்யூபில் டிரெண்டிங் சம்பவம்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் அஜித் நடிப்பில் இறுதியாக துணிவு படம் வெளியானது. இதைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும்  விடாமுயற்சி திரைப்படம் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாக உள்ளது.

தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் இந்த படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அன்றைய தினத்தில் ரிலீஸாகாது என அதிரடி அறிவிப்பு ஒன்றை  படக்குழுவினர் வெளியிட்டனர். இது அஜித் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக காணப்பட்டது.

d_i_a

இன்னொரு பக்கம்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி  படம் எதிர்வரும் என்றால் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அதற்கு முன்பே விடாமுயற்சி படத்தை திரையில் வெளியிட  தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.


இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் கடந்த 16ம் தேதி வெளியானது. தற்போது இந்த படத்தை டிரெய்லர் 1.2 மில்லியன்களை கடந்து யூடியூபில் முதல் இடத்தில் காணப்படுகின்றது. 


வழக்கமாக ரஜினி, அஜித், விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கான பாடல்கள், வீடியோக்கள், டிரெய்லர், டீசர் என்பன வெளியானால் எத்தனை மணி நேரத்தில் எவ்வளவு வியூஸ்  போய் இருக்கும் என ரசிகர்களிடையே சண்டை இடுவது வழக்கமான ஒன்றாக காணப்படுகிறது

எனினும் தற்போது விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வியூஸ் உண்மையானதாக காணப்படுவதோடு எந்தவித ஆரவாரமும் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தாமல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement