விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 முடிவடைந்து விட்டது. இந்த சீசனில் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் ரசிகர்களினால் தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் ஷோ முடிவடைந்ததன் பின்னர் போட்டியாளர்கள் பிரபலங்களுடனும்,ரசிகர்களுடனும் பிக்பாஸ் வீட்டின் கார்ட்டன் ஏரியாவில் வெற்றியை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
முத்துக்குமரன் இந்த சீசனின் டைட்டிலுக்கு தகுதியானவர் மட்டும் இல்லை பொருத்தமானவரும் கூட. பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடச் செல்வதற்கு முன்னர், அவர் தனது அம்மாவின் கரங்களில் இருந்து டம்மி டிராஃபியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றார். இப்போது கோடிக்கணக்கான இதயங்களில் இடம் பிடித்து, அவர்கள் மனதை வென்று, டைட்டிலையும் வென்று, தனது அம்மாவிடம் நிஜமான டிராஃபியைக் கொடுத்து அழகு பார்த்துள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிறைவடைந்ததன் பின்னர் இரவு பிக்பாஸ் இல்லத்தின் கார்ட்டன் ஏரியாவில் பார்ட்டி நடந்துள்ளது அதில் முத்துக்குமரன் பவித்ரா சவுந்தர்யா விஷால் அன்ஷிதா என போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களுடன் ரசிகர்களும் கலந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். ரசிகர்களுடன் முத்துக்குமரன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர் சபரி ஒரு வீடியோவில் "என்னடா டீ கப் ஓட இருக்கேன்னு பாக்குறீங்களா ஏன்னா என்னோட டைட்டில் கப் எடுத்தவர் இருக்காரு என்று முத்துவை காட்டுகிறார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!