• Dec 26 2024

இந்தியாவின் டாப் பாடகி ஒரு பாட்டுக்கு வாங்கும் சம்பளம்! எத்தனை லட்சம் தெரியுமா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல பின்னணி பாடகர்கள் என்று வரும்போது அந்த லிஸ்டில் பலர் இருக்கின்றனர். இருப்பினும், ஒரு பாடகி தனது இனிமையான குரலுக்காக மட்டுமல்ல, ஒரு பாடலுக்கு அவர் வாங்கும் சம்பளத்திற்காகவும் பிரபலமானவர். 


அந்த பாடகி வேறு யாருமல்ல இசை உலகின் ராணியாக கருதப்படும் ஸ்ரேயா கோஷல் தான். அவர் தனது இனிமையான குரல் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, அசாமீஸ், பஞ்சாபி, ஒரியா என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.


தமிழில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளும் கிடைத்தது. பாலிவுட்டில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் தான்.


"d_i_a

ஒரு பாடலுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரேயா இசைத் துறையை ஆளும் அதே வேளையில், அவரது கணவரும் வணிக உலகில் நன்கு அறியப்பட்ட வணிகத் தலைவராக உள்ளார். True caller நிறுவனத்தின் உலகளாவிய தலைவராக ஷிலாதித்யா இருக்கிறார். 


Advertisement

Advertisement