• Dec 25 2024

பார்த்திபன் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு...! நடந்தது என்ன...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சினிமா நடிகை  சீதா வீட்டில் நகை திருட்டு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது வீட்டில் இருந்து இரண்டரை சவரன் ஜிமிக்கி திருடு போனதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.  காணாமல் போன எனது இரண்டரை சவரன் ஜிமிக்கியை கண்டுபிடித்து தரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 


நடிகை சீதா, கணவர் பார்த்திபனை விவாகரத்து செய்த பின்னர் சீரியல் நடிகர் சதீஷை இரண்டாவதாக திருமணம் செய்து அவரிடம் இருந்தும் பிரிந்ததாக கூறப்படுகிறது. தற்போது விருகம்பாக்கத்தில் உள்ள புஷ்பா காலனி பகுதியில் வசித்து வருகிறார்


தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகிய சீதா, சீரியல்களில் நடித்து ரீ-எண்ட்ரி கொடுத்தார். தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'பிரதர்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலே திருட்டு தொடர்பாக இவர் அளித்த புகாரில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.  


Advertisement

Advertisement