• Dec 28 2024

தங்கலான் படத்திற்காக பா.ரஞ்சித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது. அன்றைய நாளிலே அருள்நதி நடித்த டிமான்டி காலனி 2, கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா ஆகிய திரைப்படங்களும் வெளியானது.

தங்கலான் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் மலையாள நடிகையான பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இந்த படம் முதலாவது நாளிலேயே கிட்டத்தட்ட 26 . 44 கோடிகளை வசூலித்து இருந்தது.

இன்றைய தினம் வெளியான மூன்றாவது நாள் கலெக்ஷனில் 53 கோடிகளை  வசூலில் அள்ளி குவித்திருந்தது. இதன் காரணத்தினால் தங்கலான் திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றார்கள்.

பா.ரஞ்சித் இயக்கிய படங்களில் காலா, கபாலி படத்துக்கு பிறகு குறைந்த நாட்களில் அதிக வசூல் செய்த படமாகவும் தங்கலான் மாறியிருக்கிறது



இந்த நிலையில், தங்கலான் படத்திற்காக பா.ரஞ்சித் வாங்கிய  சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி தங்கலான் படத்திற்காக இயக்குனர் பா. ரஞ்சித் பத்து கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் நோக்கிலும் படக்குழு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement