• Dec 27 2024

கருடன் படத்தில் அசுரவேட்டையாடிய நடிகர் சூரி.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் முதன்முறையாக நடிகர் சூரி ஹீரோவாக நடித்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பில் ஸ்கோர் செய்த சூரி, அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் குவித்தார்.

இதைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடிகர் சூரி, நடிப்பில் அசுரனாகவே மாறிவிட்டார் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு காணப்படுகிறது.

கருடன் படத்தில் விசுவாசம், துரோகம், நட்பு, பழிவாங்கல் நிறைந்த கிராமத்துக் கதையை பக்கா கமர்சியல் கலந்த படமாக சூரிக்கு ஒரு வெயிட்டான கேரக்டரை கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் துரை செந்தில் குமார்.


கருடன் படத்தில் நடிகர் சூரியுடன் சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ஸ்வேதா, ரோஷினி, ரேவதி ஷர்மா, ஆர்வி உதயகுமார், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் தற்போது வசூலில் வேட்டை அடிவருகின்றது.

இந்த நிலையில், நடிகர் சூரி நடித்த கருடன் படத்தின் 4வது நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த நான்கு நாட்களில் 20 கோடி வரை வசூலித்து இருப்பதாக தற்போது தகவல்கள்வெளியாகி உள்ள.

எனினும், இந்த படத்தின் வசூல் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் அதிகாரவப்பூர்வமாக இதுவரை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement