• Feb 01 2025

இட்லி கடை படத்திற்காக தனுஷ் பாராட்டிய பிரபல நடிகர்! யார் தெரியுமா?

Mathumitha / 2 hours ago

Advertisement

Listen News!

தனுஷ் இயக்கி நடித்துவரும் இட்லி கடை திரைப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், பிரகாஷ் ராஜ் மற்றும் ராஜ்கிரண் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.தனுஷின் Wunderbar Films உடன் இணைந்து Dawn Pictures தயாரித்துவரும் இப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.


மிகவும் விறு விறுப்பாக இப் படத்தின் சூட்டிங் வேலைகள் இடம்பெற்று வருகின்றது.தனுஷ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த ராஜன் திரைப்படத்தினை அடுத்து இவர் neek மற்றும் இட்லி கடை படத்தினை இயக்கி நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் தற்போது அருண் விஜய் மற்றும் தனுஷ் சேர்ந்து இருப்பது போன்ற போஸ்ட்டர் ஒன்றினை தனுஷ் தனது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த பதிவில் அருண் விஜையினை "அத்தகைய கடின உழைப்பாளி, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான நடிகருடன் பணியாற்றுவது மிகவும் சிறந்தது."என புகழ்ந்து தள்ளியுள்ளார்.மற்றும் இப் படம் ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிடப்ட்டுள்ளது.


Advertisement

Advertisement