சல்மான்கான் தொகுத்து வழங்கிவரும் ஹிந்தி பிக்போஸ் சீசன் 18 இல் குக் வித் கோமாளி பிரபலம் ஷ்ருத்திகா கலந்து சிறப்பித்திருந்தார்.தமிழ் பிக்போஸ் இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் ஹிந்தியில் கலந்து கொண்டு மிகவும் அருமையாக 97 நாட்கள் விளையாடி வெளியேறினார்.
அநேகமான தமிழ் audience ஹிந்தி பிக்போஸ் இந்த சீசனை பார்த்ததற்கு இவர் ஒரு காரணமாக இருந்தார்.இந்த நிலையில் தற்போது இவர் தான் படித்து வேலை செய்த கல்லூரி மாணவர்களுடன் பேட்டி ஒன்றில் கலந்து சிறப்பித்துள்ளார்.
குறித்த நேர்காணலில் ஸ்ருதிகா பல விடயங்களை பிக்போஸ் குறித்து பகிர்ந்துள்ளார்.அதில் "எனக்கு ஹிந்தி ,தமிழ் என எல்லா மொழிகளிலும் bad words தெரியும் ;தமிழ் பிக்போஸ் போல் அல்ல அங்கு சரளமாக அனைவரும் கெட்ட வார்த்தை பேசுவாங்க நான் என்னையே controll பண்ணிக்கிட்டு இருந்தேன் bad words பேசாமல் "என கூறியுள்ளார்.
Listen News!