• Apr 23 2026

'தாமில்' இதற்கு அர்த்தம் தெரியுமா? வெட்கமே இல்லாமல் சொல்லி சிரித்த ஜோவிகா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் உள்ள ஜோவிகா புரோவோ மற்றும் பூர்ணிமாவுக்கு 'தமிழ்' என்று தமிழில் எழுதிக் காட்டியுள்ளார். அதன்படி அவர் 'தாமில்' என்றே எழுதியுள்ளார். இவ்வாறு தமிழை தமிழில் கூட எழுத தெரியாதவராக ஜோவிகா உள்ளமை பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.

இதற்கு காரணம், ஆரம்பத்தில் அவர் தனது படிப்பு பற்றியும், படிக்காதவங்க வாழ்க்கைல வெற்றி பெற்றதாகவும் விசித்ராவுடன் பெரும் வாக்குவாதம் செய்தது தான். தற்போது ஜோவிகாவின் தமிழை பார்த்து, இதற்கு தான் படிப்பு வேணும் என்று  சொல்லுற என அவரை வைத்து செய்துள்ளார்கள்.

Advertisement

Advertisement