பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பின் அதிக வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருந்து வந்த ஜெயம் ரவி தற்போது காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.தனது மனைவியை விட்டு பிரிந்து வாழும் இவர் தனது பெயரை மாற்றிக்கொள்ளுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் "பழையன கழிதலும், புதியன புகுதலும்"என தொடங்கி "இந்த நாள் தொடங்கி, நான் ரவி / ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும், என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாரும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்."என கூறியுள்ளார்.
மற்றும் நான் ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் ரசிகர் மன்றத்தையும் பிறருக்கு உதவும் அறக்கட்டளையாக மாற்றுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.இப் பெயர் மாற்றம் தமிழ் மக்கள் ஆசியுடன், என் ரசிகர்கள், ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதை போன்றே என்னை அழைக்குமாறும், புதிய துவக்கத்திற்கு தங்களது ஆதரவை வழங்குமாறும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களது ஊக்கம் தான். எனக்கு எப்போதும் சிறப்பான உந்துதலாக இருந்து வந்துள்ளது புதிய பயணத்திலும், உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.எனவும் கூறியுள்ளார்
Listen News!