• Sep 17 2026

சூர்யா முன் நின்றதும் தடுமாறிய கயாடு லோஹர்... காரணம் என்ன தெரியுமா?

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக கயாடு லோஹர் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில், நடிகர் சூர்யாவின் 48-வது திரைப்படத்தில் கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து கயாடு லோஹர் சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “முதல் நாளில் எனக்குள் ஒருவித தயக்கமும் பதற்றமும் இருந்தது. கதாபாத்திரத்திற்குள் என்னைப் பொருத்திக்கொள்ள முயன்று கொண்டிருந்தேன். தற்போது நான்கு நாட்கள் ஆகியும் அந்தத் தயக்கம் இருக்கிறது. அமைதியாக இருந்து எனது நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வழியை கண்டறிந்து வருகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சூர்யாவின் நடிப்பு குறித்து பேசிய அவர், “சூர்யா சார் திரையில் இருக்கும் போது, அவரது நடிப்பைப் பார்க்கும் போது அவரை விட்டு கண்களை எடுப்பது மிகவும் கடினம்” எனவும் தெரிவித்துள்ளார். சூர்யாவின் நடிப்பை நேரில் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பையும், அவருடன் இணைந்து நடிப்பதில் இருக்கும் பதற்றத்தையும் கயாடு வெளிப்படையாக பகிர்ந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சூர்யாவுடன் நடிக்கும் அனுபவம் குறித்து கயாடு லோஹர் பேசிய இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் ‘சூர்யா 48’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement