• Jan 12 2025

ஒரு நாளுக்கு 10 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபுவுக்கு மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக காணப்படுபவர் தான் யோகி பாபு. இவர் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பின்பு வெள்ளித்திரைக்கு வந்தவர்.

ஆரம்பத்தில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன்பின்பு யாமிருக்க பயமேன் என்ற படத்தில் அவர் கேரக்டர் பலராலும் ரசிக்கப்பட்டது. அதே சமயம் அதிகமாகவே அவர் உருவக்கேலி செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து யோகி பாபுவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கினர் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைத்தார்.  தற்போது அவர் ஹீரோவாக நடித்து வந்தாலும் காமெடியனாகவும் கலக்கி வருகின்றார். தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும்   நடித்து வருகின்றார்


இந்த நிலையில், இன்றைய தினம் தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் யோகி பாபுவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளமாக பெரும் யோகி பாபு, நாள் கணக்கில் ஒரு நாளைக்கு பத்து லட்சம் வரை வாங்குவதாக சொல்லப்படுகின்றது. சென்னையில் பிரம்மாண்டமாக வீடு கட்டிருக்கும் அவருக்கு 40 லிருந்து 50 கோடி வரை மொத்த சொத்து இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement