• Jan 12 2025

கான்டாக்ட் லென்ஸ் பாவிச்சு கண் பார்வை இழந்த சிம்பு பட நடிகை..?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான வானம் படத்தில் சிம்புவுக்கு  ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ஜாஸ்மின் பாஸின். இவர்  தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்

நடிகை ஜாஸ்மின் பாஸின் படங்களில் நடிப்பது குறைவு என்றாலும் டிவி தொடர்கள், வெப் சீரிஸ், ஆல்பம் பாடல்களில் பிஸியாக  நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் அதாவது ஜூலை 17 ஆம் தேதி அவர் டெல்லியில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொள்வதற்காக கண்ணில் காண்டக்ட் லென்ஸ் வைத்துள்ளார். இதனால் ஏற்பட்ட கண்ணெரிச்சல் காரணமாக அதனைப் பொறுத்துக் கொண்டு கூலிங் கிளாஸ் அணிந்து ரேம்ப் வாக் செய்து இருக்கிறார்.

இதனால் கண் பார்வை இழந்து போய் எதுவுமே செய்ய முடியாத பார்க்க முடியாத நிலையில், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் உதவி செய்து உள்ளார்கள்.


குறித்த நிகழ்ச்சி முடிந்த பிறகு டாக்டரிடம் சென்று பரிசோதித்த போது அவருக்கு  corneal damage ஏற்பட்டு இருக்கின்றது என்று சொல்லி கண்களுக்கு மருந்து போட்டு உள்ளார்கள்.

தற்போது மும்பைக்கு வந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றேன் இப்போது கண் பார்வை சரியாக வருகின்றது என்று ஜாஸ்மின் பாஸில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement