• Dec 26 2024

ஆசை பட நாயகி சுவலட்சுமி இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?-அடடே இந்த நாட்டில் தான் இருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் அஜித் நடிப்பில் வெளியான ஆசை என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை சுவலட்சுமி. இப்படத்தில இவருடைய இயல்பான நடிப்பும், இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் இவரைப் பிரபல்யப்படுத்தியது.இதனால் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தன.

அதன் படி நடிகர் விஜய்யுடன் இணைந்து லவ் டுடே மற்றும் நிலவே வா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.அதுமட்டுமல்லாமல் முரளி, இளைய திலகம் பிரபு மற்றும் கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ் பெற்றார்.தமிழில் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.


பொதுவாக நடிகைகள் என்றாலே கிளாமர் என்கின்ற ஒரு விஷயம் அவர்களுடைய கதாபாத்திரத்தில் இருக்கும்.ஆனால் சுவலட்சுமி திரைத்துறையில் பயணித்த 9 ஆண்டுகளும் குடும்பம் பாங்கான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் எனலாம். 


கடந்த 2002 ஆண்டு பிரபல தொழிலதிபரும் பேராசிரியருமான ஸ்வகடோ பானர்ஜியை திருமணம் செய்து கொண்டு ஜெனிவா மற்றும் சன் பிரான்சிஸ்கோ நகரங்களில் வாழ்ந்து வந்த இவர், தற்பொழுது தனது கணவரின் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Advertisement