• Apr 24 2026

விஜய்யின் "ஜனநாயகன்" படம் சொல்லும் மெசேஜ் என்ன தெரியுமா.? பிக்பாஸ் பிரபலம் பகீர்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது.


‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் எச்.வினோத். சமூக அக்கறை கொண்ட கதைகளை திரையில் சொல்லுவதில் பெயர் பெற்ற எச்.வினோத், இந்த படத்திலும் ஒரு வலுவான சமூக கருத்தை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாடலின் வரிகள், இசை மற்றும் விஜய்யின் திரை தோற்றம் ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவாகின.

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், பாடல்கள் முதல் டீசர், ட்ரெய்லர் வரை ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களால் திருவிழா போல கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் சொல்லப்படும் முக்கிய கருத்து குறித்து பிக்பாஸ் 9 பிரபலம் பிரஜின் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இந்த படத்தின் சமூக மெசேஜ் குறித்து பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரஜின் தனது கருத்தில்,“எல்லா இடங்களிலும் பெண்களுக்கு தவறுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. பெண்கள் தைரியமாக அதை பற்றி பேச வேண்டும். இந்தப் படத்தின் முக்கிய கருத்தே “Good Touch Bad Touch" பற்றி தான். நாம் குழந்தைகளுக்கு இதை பற்றி சொல்லி தர வேண்டும்" என்று கூறியுள்ளார். 

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு திரைப்படம் மூலம் சொல்லப்படுவது வரவேற்கத்தக்கது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement