• Apr 24 2026

நந்தினி மரணிக்கும் முன்பு எழுதிய இறுதி கடிதம்.? சூட்சுமமாக சொன்ன விஷயங்கள் அம்பலம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில்  நடிக்கும் நடிகைகள், நடிகர்கள் ஆகியோர்   ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர்களாக காணப்படுகின்றார்கள். இவர்கள் பொது வெளியில் செல்லும்போது ரசிகர்கள் இவர்களை அந்த சீரியல்களுக்குரிய கேரக்டர்களாகவே காணுகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிறகடிக்க ஆசை சீரியலில் அருணுக்கு அம்மாவாக நடித்தவர்  திடீரென உயிரிழந்தார். அவருடைய சோகம் சின்னத்திரை  நடிகர்களிடையே  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இதை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில்  கௌரி சீரியலில் ஹீரோயினாக நடித்த  நடிகை நந்தினி திடீரென உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் சின்னத்திரை உலகையே உலுக்கியுள்ளது. 

கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் பிரபலமான நட்சத்திரமாக விளங்கியவர் நந்தினி. இவர் பெங்களூரில் உள்ள தனது அறையில் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே சீரியலில்  விஷம் குடித்து உயிரிழப்பது போன்ற காட்சியில் நடித்துள்ளார். அதற்கு பின்பு இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த நிலையில், நடிகை நந்தினி உயிரிழந்த இல்லத்தில்  அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.  அந்த கடிதம் தற்போது காவல்துறையிடம் சிக்கி உள்ளது.  

மேலும் அவர் எழுதிய கடிதத்தில்  திருமணம் தொடர்பான அழுத்தம்,  தன்னுடைய திருமண விருப்பங்களை  கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும்,  தான் சொந்தமாக முடிவெடுக்க குடும்பத்தினர் தடையாக இருப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சூட்சுமமாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

Advertisement

Advertisement