• Dec 26 2024

பொது மேடையில் ராஷ்மிக்காவிற்கு ஏற்பட்ட சங்கடம்... உடனே சூப்பர் ஸ்டார் என்ன செய்தார் தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நேஷனல் கிரஸ் என அழைக்கபடும் ராஷ்மிகா மந்தனா தனது நடிப்பால் பல ரசிகர்களை தன்வசம் இழுத்துவைத்துள்ளார். தென்னிந்தியாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்க தொடங்கி விட்டார் நடிகை ராஷ்மிகா. இவர் நடிப்பில் அனிமல் படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.


இப்படத்தை சந்தீப் வங்கா இயக்க, ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட் படம் என்கின்றனர். படம் ரிலீஸ் தேதியை நெருங்கியுள்ள நிலையில் படக்குழு படு வேகமாக படத்தை புரொமோஷன் செய்து வருகின்றனர். 


இந்நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடக்க, அதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில் எல்லோரையும் புகழ்ந்து ராஷ்மிகாவை மறந்து சென்றுவிட்டார். ராஷ்மிகாவிற்கு ஒரு மாதிரி சங்கடமாக உடனே சுதாரித்து மகேஷ் பாபு, ராஷ்மிகாவிடம் மன்னிப்பு கேட்டதோடு, உங்கள் வளர்ச்சி என்னை பிரமிக்க வைக்கின்றது என பாராட்டியுள்ளார். 


Advertisement

Advertisement