• Apr 19 2026

பிக்பாஸ் 3 Wild Card என்ட்ரிதானே 2 பேர் இருக்க மற்ற ஒரு போட்டியாளர் எங்கே?... நடந்தது என்ன முழுவிபரம் உள்ளே...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நம்ம விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவோடு ஓளிபரப்பாகி வருகிறது. மக்களும் வாரா வாரம் நிகழ்ச்சியில் இருந்து யாரை எலிமினேட் செய்ய வேண்டும் என தெடர்ந்து ஓட் செய்து வருகிறார்கள்.


கடந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து அக்ஷயா மற்றும் பிராவோ வெளியேறி இருந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பூகம்பம் டாஸ்க் கொடுக்கப்பட்டது, இதில் தோற்றால் 3 வைல்ட் கார்ட்டு என்ட்ரி வருவார்கள்  எனவே 3 பேர் எலிமினேட் ஆகி வெளியேறுவார்கள் என பிக்பாஸ் அறிவித்தார். 


ஆனால் 3 பேர் என கூறிய பிக்பாஸ் இப்போது அக்ஷயா மற்றும் பிராவோவை வெளியேற்றி விஜய் வர்மா மற்றும் அனன்யாவை உள்ளே அனுப்பியுள்ளார்கள். இதனால் ரசிகர்கள் 2 பேர் என கூறி இரண்டு பேர் மட்டும் வந்தது ஏன் என குழம்பியுள்ளார்கள். 


பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய போட்டியாளர்களில் மீண்டும் வீட்டிற்குள் அனுப்ப வினுஷாவையும் பிக்பாஸ் குழு தேர்வு செய்தார்கள். ஆனால் வினுஷா வெளியேறியபோது மிக்சர் பொட்டலம் போஸ்ட் போட்டு சேனலே கலாய்த்தது. பின் வீட்டைவிட்டு வெளியே வந்த பிறகு நிக்சன் என சிலர் உருவக்கேலி செய்ய அதுவுமே அவருக்கு காயத்தை கொடுத்தது. 


இதனால் மிகவும் மன வேதனையில் இருக்கும் வினுஷா வாய்ப்பு வந்தும் வேண்டாம் என கூறியிருக்கிறார்.அவருக்கு அடுத்து யுகேந்திரனும் லிஸ்டில் இருந்துள்ளார், ஆனால் அவர் பிரதீப் ஆதரவாக பேசியிருப்பதால் நிகழ்ச்சி குழுவே அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டாம் என முடிவு செய்தனராம். அதனால் தான் 2 பேர் வெளியே போக 2 பேர் உள்ளே வந்துள்ளார்கள்.  


Advertisement

Advertisement