• Dec 24 2024

விஜய் என்ன செய்தார் தெரியுமா? இவ்வளவு விஷயம் இருக்கா மாநாட்டில்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் மாநாடு அக்டோபர் 27ம் தேதி மிக மிக பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதற்காகன வேலைகள் இரவு பகலாக நடந்து வருகிறது. ஒவ்வொரு வேலையும் பார்த்து பார்த்து tvk தொண்டர்கள் செய்கிறார்கள். நாளை எப்போது வரும் தளபதியின் உரையை எப்போது கேட்ப்போம் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கிறார்கள். 


விஜய் நடந்து வருவதற்காகவே தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மழை பெய்தாலும் திடலுக்குள் மழை நீர் உள்ளே வராமல் இருக்க தரையின் அடி சுமார் 3 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெரிய கட்டவுட்டுகள், 4 லட்சம் மக்கள் இருக்க கூடிய வகையில் மாநாட்டுதிடல் அமைப்பு, வெளியே இருந்து பார்ப்பதற்காக கூட LETகள், 2ரை லட்சம் தண்ணீர் போத்தல்கள் 1 லட்சம் பிஸ்கெட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்படி ரசிகர்களுக்காகவும் தனது தொண்டர்களுக்காகவும் பார்த்து பார்த்து செய்யும் விஜய் முன்னர் என்ன செய்து இருக்கிறார் தெரியுமா.


தளபதி விஜய் இந்த கட்ச்சியை ஆரம்பிக்கும் முன்னரே ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவுவது, அன்னதானம், இரத்ததானம் நடத்துவது எனச் சமூக சேவைகள் செய்து வந்தார். அத்தோடு இவரின் இயக்கத்தில் உள்ள ரசிகர்கள் அந்த படிகளை தீவிரமாக செய்து வந்தனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு, மீனவர்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்கள், இலங்கைத் தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் போன்றவற்றை நடத்தினர்.

d_i_a

'ஈழ இனப்படுகொலையைச் செய்த ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்' என்று ஜெயலலிதா பேசியதை வரவேற்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.  பலவாறான அவமானங்களை சந்தித்தாலும் அதற்கு பதிலாக பல மடங்கு உயர்த்து இருக்கிறார் விஜய். எண்ணிலடங்கா ரசிகர்கள் ஏராளமான தொண்டர்கள் தனது படத்திற்கு அவர்கள் தந்த ஆதரவு இது எல்லாம் எண்ணியே தற்போது அந்த மக்களுக்காக செய்ய வேண்டும் என்று இறங்கி இருக்கிறார் தளபதி விஜய்.


தனது 69வது திரைப்படத்துடன் சினிமாவில் இருந்தும் விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்நிலையில் நாளை நடைபெறும் மாநாட்டில் மக்களுக்காக தளபதி என்னகொள்ளையை உருவாக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement