• Dec 24 2024

அஜித் கடவுளா அவருக்கே நான் வில்லன்டா...! மாஸ்டர் திரைப்பட வில்லன் பதிவு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தற்போது குட் பேட் அக்லீ படத்தில் நடித்து வருகிறார்.  அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். 


முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ள நிலையில் தற்போது அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் அஜித் உடன் நடித்து இருப்பது பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்த  எனக்கு அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா டீமில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

d_i_a

அதன் மூலமாக பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு தேட முடிந்தது. அஜித் சார் உடன் நான் மிக நெருக்கமாக பணியாற்றி இருக்கிறேன். அவரது ஷூட்டிங் செட் செல்வது, ப்ரோமோஷன், மார்க்கெட்டிங் செய்வது போன்ற பல வேலைகள் செய்திருக்கிறேன்.


வீரம் படத்தின் டீஸர் அப்லோடு செய்ததே நான் தான். மாஸ்டர் படம் பார்த்துவிட்டு அஜித் சார் எனக்கு போன் செய்து நாம் விரைவில் சேர்ந்து பணியாற்றலாம் என கூறினார். அது தற்போது நிஜமாகி விட்டது. தற்போது குட் பேட் அக்லீ படத்தில் அவருடன் நடிக்கிறேன். அஜித் சார், இயக்குனர் ஆதிக், தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி என அவர் கூறி தனது இன்ஸராகிறேம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement