• Feb 26 2025

திருமண தேதியை அறிவித்த பிக்பாஸ் ஜோடி..! எப்போ தெரியுமா..?

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொண்டு மிகவும் அருமையாக விளையாடி வந்த பாவனாவினை அதே சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்த அமீர் காதலித்து வந்தார். பாவனா அமீரை விட அதிக வயது வித்தியாசம் உடையவர் என்பதால் அனைவராலும் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.


3 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வரும் இவர்கள் அனைவராலும் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பி வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பதில் சொல்லும் முகமாக இன்று காதலர் தினத்தினை முன்னிட்டு தங்களது காதலிற்கு சாட்சியாக அழகிய வீடியோ பதிவு ஒன்றுடன் தேதியை அறிவித்துள்ளனர்.


குறித்த பதிவில் "மூணு வருஷம் எப்புடி போச்சுன்னே தெரியல நமக்கு புடிச்சவங்க கூட இருந்தா மூணு வருஷம் கூட மூணு நிமிஷம் மாதிரி தான் இருக்கும் " என பதிவிட்டுள்ளனர்.மற்றும் இவர்களது திருமணம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நடைபெறும் என்பதனையும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement