வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் பெற்ற விடுதலை 2 திரைப்படத்தினை தொடர்ந்து இவர் தனுஷுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் தனுஷ் தற்போது இயக்குநராக மிகவும் பிஸியாக இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷை வைத்து இயக்க தீர்மானித்திருந்த "சூதாடி " எனும் படத்தினை அவர் தற்போது இயக்குநர் கெளதம் மேனனிற்கு வழங்கியுள்ளதாகவும் இவர் இப் படத்தினை நடிகர் ரவிமோகனை வைத்து இயக்க தீர்மானித்துள்ளாராம்.
இதன் சமரச பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் இக் கதை ரவிமோகனிற்கு மிகவும் பிடித்து போயுள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது. மற்றும் வெற்றிமாறன் இந்த கதையினை தனுஷின் ஆடுகளம் பட வெற்றியின் பின் எழுதியுள்ளமையினால் இப் படத்தின் ஒரு சில விடயங்கள் மாற்றம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தனுஷிற்கு ஆடுகளம் ஒரு வெற்றி பாதைக்கு வழிகாட்டிய ஒரு திரைப்படம் இதனால் தனுஷ் ரசிகர்கள் இந்த கூட்டணியினை மீண்டும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.ஆனால் பட வாய்ப்பு தனுஷிற்கு கிடைக்காமையினால் ரசிகர்கள் சோகத்தில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!