• Sep 17 2026

வேட்டையன் ஆடியோ லாஞ்ச் எப்போ தெரியுமா? குட்டி கதை சொல்ல ரெடியான சூப்பர் ஸ்டார்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

த. செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாபச்சன், ராணா ரகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் நடித்துள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த படம் எதிர்வரும் அக்டோபர் பத்தாம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தான் தயாரித்து வருகின்றது. ஆனால் தற்போது தமது முழு கவனத்தையும் வேட்டையன் படத்தின் மீது செலுத்தி வருகின்றது லைகா நிறுவனம். இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா- கழுகு கதையில் அதில் காக்கா நடிகர் விஜய்தான் என   பல விமர்சனங்கள் கிளம்பின. அதன் பின்பு லியோ படத்தின்  வெற்றி விழாவில் தளபதி விஜயும் காக்கா கழுகு என கதை பேசியதால் அந்தப் பிரச்சினை பெரிதானது.


இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த இசையீட்டு விழாவில் அமிதாபட்சன், மஞ்சு வாரியர், ராணா ரகுபதி உள்ளிட்டவர் பங்கேற்க போவதாகவும் இதில் அனிருத் லைவ் பர்ஃபார்மன்ஸ்  செய்ய உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, வேட்டையின் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் எதைப் பற்றி கதை சொல்ல போகிறார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement