• Dec 27 2024

மீண்டும் சிறை செல்வாரா ஜானி மாஸ்டர்? 21 வயது நடனக் கலைஞர் அளித்த பரபரப்பு புகார்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற 'ஹலமதி ஹபிபோ', வாரிசு படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே' உள்ளிட்ட பாடல்களுக்கு கொரியோகிராஃபி செய்தவர்தான் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி.

மலையாள சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் பற்றி பல பெண்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், கேரள அரசு ஹேமா கமிட்டி அறிக்கை மூலத்தை வெளியிட்டதோடு பல முன்னணி சினிமா பிரபலங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தெலுங்கிலும் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதாக சமந்தா முன்வைத்த குற்றச்சாட்டை  தொடர்ந்து, தற்போது ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம் நடன இயக்குனர் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ஜானி  மாஸ்டர் குழுவில் இருந்த பெண் நடன மாஸ்டர் ஒருவரே பாதிக்கப்பட்டு தற்போது தனியாக நடன இயக்குனராக செயல்பட்டு வருகின்றார். இவர் ஜானி  மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.


அதன்படி ஹைதராபாத், சென்னை மும்பை என ஷூட்டிங் சென்ற இடங்களில்  எல்லாம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன் என்று அதிர்ச்சி புகாரை கூறியுள்ள நிலையில் , ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு சதீஷ் என்பவர் அளித்த பாலியல் புகாரினால் ஆறு மாதங்கள் சிறைவாசம் இருந்தார் ஜானி மாஸ்டர். தெலுங்கு சினிமாவில் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement