விஜய் டிவியின் பிரமாண்டமான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது இந்நிலையில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.பணப்பெட்டி எடுப்பவர்கள் தொடர்ந்து விளையாடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதன் படி கடந்த தினங்களில் முத்து ,விஷால் ,ரஜான் ஆகியோர் குறிப்பிட்ட நேரத்துக்குள் வெளியே சென்று பணப்பெட்டியினை எடுத்து வெற்றியடைந்திருந்தனர்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் அடுத்த பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை பணப்பெட்டியின் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு 25 செக்கென்ஸ் நேரம் வழங்கப்பட்டுள்ளது, மேலும் 45 மீட்டர் தூரத்தில் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.இதனை எடுப்பதற்கு ஜாக்குலின் மிகவும் முயற்சி செய்து தற்போது தோல்வியடைந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது அதில் ஜாக்குலின் வெளியே வந்துவிட்டார் இருப்பினும் பிக்பாஸ் ஒரு டைப் finished முடிவுகள் இன்னும் கொஞ்ச நேரத்தில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.தற்போது இந்த ப்ரோமோவில் இரண்டு விநாடிகள் தாமதமாக முடித்தமையினால் பிக்போஸ் வீட்டிலிருந்து கண்ணீருடன் ஜாக்குலின் வெளியேறியுள்ளார்.
Listen News!