• Dec 27 2024

ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்ற கையோடு விஜய் வாங்கிய சொகுசு கார் எது தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்பவர் தான் நடிகர் விஜய். இவர் ஒரு படத்திற்கு இருநூறு கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார். இவர் கடைசியாக நடிக்க உள்ள 69 ஆவது படத்திற்கு விஜய்க்கு சுமார்  250 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் சினிமாவில் பிரபலமாக காணப்படும் விஜய், இன்னொரு பக்கம் அரசியலிலும் சிறந்து விளங்கி வருகின்றார். கடந்த ஆண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கு முகமாக அவர்களுக்கு ஊக்கத்தொகையும் விலை உயர்ந்த பரிசுகளையும் வழங்கி ஏனைய மாணவர்களுக்கும் கல்வியில் ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றார்.

நடிகர் விஜய் கார்கள் மீது அதிக பிரியம் கொண்டவர் என்பதோடு அதிலும் வெளிநாட்டு கார்கள் என்றால் விஜய்க்கு அதிக விருப்பம் உள்ளதாம். இதனால் தனக்கு பிடித்த ரோல்ஸ் ராய்ஸ் காரை கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து இறக்குமதி செய்தார்.

ஆனாலும் அந்த காரை இறக்குமதி செய்தால் அதற்கு அதிக வரி போடப்பட்டது. இதன் காரணத்தினாலே சமீபத்தில் அந்த காரை விற்பனை செய்வதற்கு விளம்பரம் கொடுத்திருந்தால் விஜய். இந்த விளம்பரம் மிகவும் வைரலானது.


அந்த காரை மட்டுமின்றி விஜய் தன்னிடமிருந்த இன்னொரு காரையும்  விற்பனை செய்து உள்ளாராம். அதற்கு காரணம் புதிதாக கார் ஒன்றை  வாங்குவதற்கு தானாம்.

அதன்படி தற்போது லெக்சஸ் காரை புதிதாக வாங்கி இருக்கிறார் விஜய். அதன் விலை ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement