• Oct 05 2025

தமிழ்நாட்டில் அதிக வியூஸ்களை அள்ளிய சீரியல் எது தெரியுமா? லிஸ்ட் இதோ

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழில் சினிமாவுக்கு நிகராக சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுசு காணப்படுகின்றது. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவை மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரம்  விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும்  சீரியல்களில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்டு டாப் ஐந்து இடங்களை பிடித்த சீரியல்கள் பற்றி  விரிவாக பார்ப்போம். 

சன் டிவியில் ஐந்தாவது இடத்தில் ராமாயணம் சீரியல் காணப்படுகின்றது. இந்த சீரியலுக்கு 6.85 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.  இதற்கு அடுத்தபடியாக  எதிர்நீச்சல் சீரியல் நான்காவது இடத்தை பெற்றுள்ளது. இது 9.02 புள்ளிகளை பெற்றுள்ளது. 


மூன்றாவது இடத்தில்  அன்னம், கயல் மற்றும் மருமகள் சீரியல்களின் மெகா சங்கமம்  உள்ளது. இது 9. 66 ரேட்டிங்கை பெற்றுள்ளது.  மேலும் சிங்க பெண்ணே சீரியல்  இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.  முதலிடத்தை மூன்று முடிச்சு சீரியல் பிடித்துள்ளது. இதற்கு 10.14 புள்ளிகள் கிடைத்துள்ளன. 

அதே நேரத்தில் விஜய் டிவியில்  இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியல் முதலிடத்தை பெற்றுள்ளது. அதற்கு 1. 52 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.  இரண்டாவது இடத்தை அய்யனார் துணை சீரியல் 7.36 புள்ளிகள் பெற்று உள்ளது. 


மூன்றாவது இடத்தில்  6.27 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பெற்று உள்ளது.  நான்காவது இடத்தில் சின்ன மருமகள் சீரியல் 6. 25 புள்ளிகளை பெற்றுள்ளது.  ஐந்தாவது இடத்தை 5. 26 ரேட்டிங்கில் மகாநதி சீரியல் பிடித்துள்ளது. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  கார்த்திகை  தீபம் சீரியல் 5 .42 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது . இரண்டாவது இடத்தில் அயலி சீரியல் 5.22 புள்ளிகளுடனும், 

மூன்றாவது இடத்தில் அண்ணா சீரியல் 5.07 புள்ளிகளையும், நான்காவது இடத்தில் வீரா சீரியல் 4. 48 புள்ளிகளையும் பெற்றுள்ளன.  ஐந்தாவது இடத்தை ஆலியா மானசா நடிப்பில் புதிதாக ஒளிபரப்பாகும் பாரிஜாதம் சீரியல் 3.82 புள்ளிகளை பெற்று உள்ளது. 

Advertisement

Advertisement