• Oct 26 2024

ஆஹா கல்யாணம் பிரபா யார் தெரியுமா?- எப்படி சீரியலில் நடிக்க வந்தார் என்று தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஆஹா கல்யாணம். மூன்று பெண் பிள்ளைகளை பெற்ற தாய் தனது பிள்ளைகளை பெரிய கோடீஸ்வர வீட்டில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எவ்வாறு எல்லாம் போராடுகின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அந்த வகையில் இந்த சீரியலில் பிரபா என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பிரபலம் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க. பவ்யஸ்ரீ என்னும் பெயரைக் கொண்ட இவர் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்தார். 24 வயதைக் கொண்ட இவர் கல்லுாரி படிப்பை முடித்த பின்னர் மாடர்லிங் மற்றும் நடிப்பில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.


அதன்படி ஷு தமிழில் ஒளிபரப்பான திருமதி ஹிட்லர் என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.தொர்ந்து செம்பருத்தி சீரியலிலும் நடித்திருந்தார்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சிற்பிக்குள் முத்து என்னும் சீரியலில் தங்கச்சி என்னும் காரக்டரில் நடித்திருந்தார்.


 இதனை அடுத்து தற்பொழுது தான் ஆஹா கல்யாணம் சீரியலில் பிரபா என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இதில் தனது வித்தியாசமான நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement