• Dec 26 2024

ராஷ்மிகாவின் உடல் மார்பிலிங் செய்யப்பட்ட பெண் யார் தெரியுமா?- அவரே கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருபக்கம் புதுபுது கண்டுபிடிப்புகளை கொண்டுவந்தாலும், மறுபக்கம் அதன் ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான். 

இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து ரியலானது போல் உருவாக்க முடியும்.ஒருவரின் குரலை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். சமீபத்தில் கூட தமிழ் பாடல்களை பிரதமர் மோடியின் குரலில் மாற்றி அதனை இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி வந்தனர். 


சினிமா பாடகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மோடியை தரமான பாடகராக்கி உள்ளது AI தொழில்நுட்பம்.அதேவேளையில், சிலர் இதை தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் வீடியோவில் மார்பிங் செய்து வெளியிட்டனர். அந்த பெண் ஆபாச உடை அணிந்திருந்தார். 

அந்த வீடியோவை மார்பிங் செய்த பின் அது நிஜமாகவே ராஷ்மிகா போல இருந்ததால் பலரும் அதை உண்மை என நம்பிவிட்டனர். பின்னர் இது ராஷ்மிகாவுக்கு தெரியவர அவர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.


அந்த வீடியோவில் இருந்த பெண் சாரா படேல் என்பவர் ஆவார். அவரது உடலில் ராஷ்மிகாவின் முகம் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பிய சூழலில் மத்திய அரசாங்கமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில் வீடியோவில் இருந்த சாரா படேல் இது தொடர்பாக கூறியதாவது “யாரோ ஒரு நபர் எனது உடலையும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தையும் பயன்படுத்தி டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கியது என் கவனத்துக்கு வந்திருக்கிறது.

இந்த டீப் ஃபேக் வீடியோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை பார்த்து நான் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இப்படி வீடியோ வெளியானதை பார்த்து வருத்தமும் கொள்கிறேன். இந்த சம்பவத்தால் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடவே பயமாக இருக்கிறது. 

பெண்கள் மற்றும் சிறுமிகளின் எதிர்காலத்தைப் பற்றி நினைத்தால் கவலையாக இருக்கிறது. இணையத்தில் பகிரப்படுபவை அனைத்துமே உண்மையானவை இல்லை. எனவே நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் உண்மையானதா இல்லையா என்பதை தயவு செய்து பல முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement

Advertisement