• Dec 26 2024

நாப்கின் கூட டைம் எடுத்துதான் கொடுப்பீங்களா? பிக்பாஸ் வீட்டில் தொடரும் களேபரம்! வைரலான வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்ட விஷயம் தான் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அவருக்கு ரெட் கார்டு கொடுத்த பெண் போட்டியாளர்களுக்கு எதிராக விசித்ராவும், அர்ச்சனாவும் களமிறங்கியதால், இருதரப்புக்கும் இடையே நேற்று முழுக்க வார்த்தை மோதல்கள் வெடித்தன. இந்த பிரச்சனையால் ஸ்மால் ஹவுஸ்மேட்ஸை பழிவாங்க முடிவெடுத்த மாயா, அவர்களை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறார்.

இவ்வாறான நிலையில், பிக்பாஸ் வீட்டில் தற்போது கேப்டனாக உள்ள மாயா ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள பெண்களின் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாது என்று சொல்கிறார்.இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.


அதன்படி, ட்விட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் ஒன்றில், விசித்ரா டூத் பிரஷ் கேட்க, 'கையால விலக்குங்க' என மாயா சொல்கிறார். இதையடுத்து  நாப்கின் கேட்கவும், கொடுக்க முடியாது என்று சொல்ல, 'சானிடரி நாப்கின் கூட டைம் எடுத்துதான் கொடுப்பீங்களா' என்று விசித்ரா கேட்க, 'அத தருவோம் இருங்க' என ஜோவிகா பதில் சொல்லிவிட்டு செல்கிறார்.

இதை பார்த்த அர்ச்சனா 'விடுங்க மேம்' என சொல்ல, 'நீ இரு, பல் தேய்க்க ப்ர்ஷ் கொடுக்கல சரி, சானிட்ரி நாப்கின் கூடவா கொடுக்க மாட்டாங்க' என விசித்ரா கேட்க, அந்த நேரத்தில் அர்ச்சனாவுக்கு ரவீனா நாப்கின் எடுத்து  கொடுக்கிறார். தற்போது பிக் பாஸ் வீட்டில் நாப்கின்க்கு கூட கெஞ்ச வேண்டுமா? என்று விசித்ரா கேட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.

அதுமட்டுமின்றி, பிக் பாஸ் வீட்டிலுள்ள பெண்களின் பாதுகாப்பு கருதி பிரதீப் வெளியேற்றப்பட்டார். தற்போது வீட்டில் நடக்கும் இவ்வாறான சம்பவங்களினால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



Advertisement

Advertisement