• Dec 25 2024

ஈரமான ரோஜாவே சீரியல் ப்ரியா யார் தெரியுமா?- வெளியாகிய சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து ரசிகர்களின் ரெஸ்போன்ஸ் அதிகமாகவே கிடைத்து வருகின்றது. அந்த வகையில் இதில் ப்ரியா என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் பிரபலம் குறித்துத் தான் பார்க்கப் போகின்றோம்.

அதாவது ப்ரியாவின் இயற்பெயர் ஸ்வாதி கவுடா தான் இவரது இயற்பெயர். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் 1992ம் ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி பிறந்தார். இவருக்கு டான்ஸ் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். டான்ஸ்ல அடுத்த அடுத்த இடத்திற்குப் போக வேண்டும் என்றதற்காக அனைத்து டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வாராம்.


இது தவிர சித்திரம் வரைதலிலும் ஆர்வம் உடையவராம். இவரின் இந்த திறமையினால தான் சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததாம். அதன்படி முதலில் இவர் கன்னடத்தில் வெளியான கட்டு கட்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினாராம். தொடர்ந்து கன்னடத்தில் மட்டும் 8 காரெக்டரில் நடித்தாராம்.

இதனை அடுத்து படவாய்ப்புக்கள் குறைந்ததால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தாராம்.அதன்படி கன்னடத்தில் வெளியான யாரோ இவள் என்னும் சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தாராம். அந்த சீரியலில் அம்மா காரெக்டரில் நடித்து பிரபல்யமானாராம்.


ஆரம்பத்தில இவங்க தமிழில் நடிக்க வந்தபோது இவங்களுக்கு தமிழ் தெரியாதாம். ஆனால் இப்போ தமிழ் நன்றாகக் கற்றுக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டாராம். இவருக்கு சாப்பாடு என்றால் ரொம்ப பிடிக்குமாம்.அதனால டயட் எல்லாம் பாஃலோ பண்ணமாட்டாராம்.


இவருக்கு தமிழில் பிடித்த படம் கும்கியாம். தெலுங்கில் பாகுபலி படம் பிடிக்குமாம். அது மாதிரி எம்.எஸ் தோனி எல்லா மொழியிலும் பிடிக்குமாம். அதனை நிறைய தரம் பார்த்திருக்கின்றாராம். இவருக்கு எந்த காரெக்டரில் நடிச்சாலும் அது ரசிகர் மனதில் இடம் பிடித்திட வேண்டும் என்று தான் நினைத்து நடிப்பராம். இதனால் தான் ஈரமான ரோஜா சீரியலிலும் நடித்து வருகின்றாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement