• Apr 18 2026

மாஸ் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பாடகர் DSP.! இயக்குநர் யார் தெரியுமா?

shali / 5 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ‘ராக்ஸ்டார்’ என ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் (DSP), தனது ஹிட் பாடல்களாலும், இசையின் மாஸ்டர் பீஸ்களாலும் உலகம் முழுவதும் பிரபலமானவர். ஆனால் தற்போது அவர் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இசை உலகில் வெற்றிகரமான பயணத்தைச் சந்தித்து வந்த DSP, இப்போது ஹீரோவாக வலம் வரவுள்ளதாகவும், அதற்கான தயாரிப்புகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் திரை உலகம் அதிர்ச்சியுடன் பேசிக் கொண்டிருக்கிறது.

இந்த புதிய முயற்சி, "Balagam" படத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட இயக்குநர் இயக்குவதுடன் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு (Dil Raju) தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இப்படம் DSP-வின் வாழ்க்கைக்கு புதிய திருப்பமாக காணப்படுகின்றது. தென்னிந்திய திரையுலகில் இசையமைப்பாளர்கள் பெரும்பாலும் திரைக்கு பின்னால் திகழ்வது வழக்கம். ஆனால் DSP, தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்ற நினைப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக காணப்படுகிறது.

Advertisement

Advertisement