தமிழ் சினிமாவில் தீபாவளி என்றாலே பல முக்கியமான திரைப்படங்கள் வெளிவருவது வழக்கம். இந்தாண்டு, 2025 அக்டோபர் 17ம் தேதி, ரசிகர்கள் எதிர்பார்த்த படி "dude", "பைசன்" மற்றும் "டீசல்" ஆகிய படங்கள் வெளியாகியிருந்தன.

இதில் தற்பொழுது "Dude" படத்தின் 2ம் நாள் வசூல் தற்பொழுது வெளியாகியுள்ளது. நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ ஜோடியாக நடித்துள்ள இப்படம், வெறும் 2 நாட்களிலேயே ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சாதனை தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, இப்படம் எப்படி இந்த அளவுக்கு மாபெரும் வரவேற்பை பெற்றது, வசூல் எப்படிப் பெருகியது, இதன் பின்னணி என்ன அனைத்தையும் ஒரு விரிவான பார்வையில் காணலாம்.

‘Dude’ படம் வெளியாகிய முதல் நாளிலேயே, தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்திருந்தது என செய்திகள் வெளியாகின. முன்பதிவுகள் சாதாரணமாக இல்லாமல், சில முக்கிய திரையரங்குகளில் வெளியீட்டுக்கு முன்பே டிக்கெட்டுகள் முழுமையாக விற்கப்பட்டன.
‘Dude’ படம் வெளியான இரண்டாம் நாளில், அதாவது அக்டோபர் 19, வசூலில் இன்னொரு பெரிய உயர்வைக் கண்டது. weekend இல் மற்ற படங்களை விட ‘Dude’ பெரும்பான்மையான திரையரங்குகளில் அதிக வருகையைப் பெற்றுள்ளது என்பதனை அறியமுடிகிறது.
Listen News!