• Dec 26 2024

இந்த சுட்டிக் குழந்தை யார்னு தெரியுதா? தமிழ் சினிமாவையே கலக்கிய பிரபலம்! வைரல் போட்டோஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவின் 'போடா போடி' படம் மூலம் இயக்குநராக காலடி எடுத்து வைத்தவர் தான் விக்னேஷ் சிவன்.

இதையடுத்து நயன்தாராவை வைத்து இவர் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றிக்கு பின் சூர்யா உடன் கூட்டணி அமைத்த விக்கி, தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தை இயக்கினார். ஆனாலும் அந்த படம் தோல்வியடைந்தது.

இதன் பின்னர் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் அவர் இயக்கி வெளியிட்ட படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர். அதுவும் பெரிதாக எடுபடவில்லை.


அதேபோல, மலையாள நடிகையான நயன்தாரா, முதன் முதலில் 'ஐயா' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து சந்திரமுகி, கஜினி, வல்லவன், ஈ, பில்லா, பில்லு தொடங்கி தற்போது ஜவான் வரையில் வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நயன்தாரா.

இவ்வாறு சினிமா பிரபலங்களான இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா, தற்போது தன் மகன்களுடன் பல போஸ்ட்களை போட்டுத் தள்ளி வருகிறார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் நயன்தாரா தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படமொன்று தற்போது வைரலாகி வருகின்றது.


குறித்த புகைப்படத்தில் நயன் குழந்தையாக இருப்பதோடு, தற்போது அவருடைய மகன் இருப்பதைப் போலவே அவர் காணப்படுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்கள் கூறிய நயன்தாரா, இதுவரை யாரும் பார்த்திடாத தனது குழந்தை பருவத்தின் புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement