• Dec 27 2024

கோல்டன் ஸ்பேரோ பாடலை எழுதியது யார் தெரியுமா? எஸ்.ஜே சூர்யா வாழ்த்து

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் தனுஷ். அதன் பின்பு ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தனது 50வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 கோடியை தாண்டி வசூலித்து இருந்தது.

இதைத்தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கின்றார்.

இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் என மலையாள நடிகர்கள் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.


சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் முதல் சிங்களான கோல்டன் ஸ்பேரோ பாடல் விரைவில் வெளியாகும் என்று தனுஷ் அறிவித்திருந்தார். இந்த பாடலில் பிரியங்கா மோகன் கேமியா ரோலில் நடித்துள்ளார்.

இதை அடுத்து குறித்த பாடல் எதிர் வரும் முப்பதாம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தனுஷ் இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் சிங்கிளான கோல்டன் ஸ்பேரோ பாடலை தனுஷின் மூத்த மகனான யாத்ரா எழுதியுள்ளார். இதற்கு எஸ். ஜே சூர்யா வாழ்த்து தெரிவித்து உள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement