• Feb 02 2025

அமரன் 100 ஆவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்..! திடீரென இடம் மாற்றம்..! ஏன் தெரியுமா..?

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

கமலகாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகிய அமரன் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஒளிபரப்பாகி அதிக வசூலை பெற்று வெற்றி நடை போட்டுள்ளது . இராணுவ வீரர் கேப்டன் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக கொண்டு எடுக்கபட்டது.


இப் படத்தின் வெற்றியின் பின்னர் கமலகாஷன் ai படிப்பதற்காக அமெரிக்கா சென்று நாடு திரும்பியுள்ளார்.இந்த நிலையில் படக்குழு அமரன் படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தினை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடத்துவதற்கு தீர்மானித்திருந்தது.


தற்போது குறித்த இடம் கிராமப்புறத்தில் இருப்பதால் நகரத்தின் மையத்தில் இவ் நிகழ்வு நடைபெற்றால் நன்றாக இருக்கும் என நினைத்து இடத்தினை மாற்றியுள்ளனர். இந்நிலையில் இப் பட விழாவினை கலைவாணர் அரங்கத்தில் வைப்பதாக படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement