ராஜேஸ்வரி காஜிசாமி இயக்கத்தில் கே.மணிகண்டன், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சிறந்த வரவேற்பினை பெற்று வரும் "குடும்பஸ்தன் " திரைப்படத்தில் குறித்த ஒரு கதாபாத்திரத்தில் 90ஸ் கிட்ஸ் விருப்பத்திற்குரிய நடிகர் ஒருவர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் அந்த காலகட்டத்தில் தனக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார். "மை டியர் பூதம்" தொடரில் அபிலாஷ் ஒரு முக்கிய கதாபாத்திரமான "மூசா"வாக நடித்தார் அதன் மூலம் பெரும் புகழ் பெற்றார்.
அப்போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருமே அந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர். இப்போது அந்த புகழை தொடர்ந்து "குடும்பஸ்தன்" படத்தில் அவர் நகைக்கடை உரிமையாளராக நடித்து ரசிகர்களிடையே சரியான எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளார்.
Listen News!