அஜித் ,திரிஷா ,அர்ஜுன் போன்ற பலர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தை அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில பிரச்சனைகளின் காரணமாக வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் படக்குழு அடுத்த மாதம் 6 ஆம் திகதி இப் படத்தினை வெளியிட உள்ளது.அண்மையில் வெளியாகிய ட்ரெயிலர் வீடியோவில் வெளியிட்டு திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.அது மட்டுமல்லாமல் இப் படத்தினை இந்த மாதத்திற்குள் வெளியிடுமாறு நெட்பிலிக்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளதாக தற்போது ஒரு தகவல் வைரலாகியுள்ளது.படம் அவ்வாறு வெளியிடமுடியாவிடின் விற்பனை விலையின் தொகையை குறைப்பதாகவும் அறிவித்துள்ளது.
மற்றும் சண் டிவியும் இப் பட இயக்குநருக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாம் என்னவெனில் வருகின்ற சித்திரை புது வருடத்திற்கு தமது சேனலில் இப் படத்தை ஒளிபரப்பாக்க தீர்மானித்துள்ளமையினால் அதற்கு முன்னர் படத்தினை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறிவருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!