• Dec 26 2024

பிக்பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனா முதன்முறையாக யாருடன் செல்பி எடுத்திருக்கிறார் தெரியுமா?- குவியும் வாழ்த்துக்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ம் தேதி ஆரம்பித்து நேற்றைய தினம் முடிவடைந்தது.இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பல கோடி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வின்னராகி உள்ளார்.

மேலும் இந்த சீசனில் மணி சந்திரா மற்றும் மாயா அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுக் கொண்டனர்.மேலும் டைட்டில் வென்றதன் மூலம் அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.


இதுமட்டுமின்றி ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.இதனால் ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததைத் தொடர்ந்து நைட் பார்ட்டியும் நடந்துள்ளது.இதில் பிக்பாஸ் சீசன் 7 பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்போது அர்ச்சனா முதன்முறையாக விஜே ப்ராவோடு சேர்ந்து செல்பி எடுத்திருக்கின்றார். இது குறித்த போட்டோ இப்போது வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement