• Dec 26 2024

நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய தனுஷ்- வெளியாகிய போட்டோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா - நடிகர் தனுஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி தங்களது பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏன், எதனால் இவர்கள் இருவரும் பிரிந்தனர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

நடிகர் தனுஷ் தனது படங்களின் இசை வெளியிட்டு விழாவிற்கு தனது மகன்களை வழக்கமாக அழைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த கேப்டன் மில்லர் இசை வெளியிட்ட விழாவிற்கும் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரையும் அழைத்து வந்திருந்தார்.


மேலும் அருண் மாதேஸ்வரன், இயக்கத்தில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இப்படத்தில் பிரபல கன்னட திரை உலக சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.


இது ஒரு புறம் இருக்க உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். எனவே தனுஷும் தன்னுடைய பெற்றோர் மற்றும் மகன்களுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படத்தையும் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement