• Dec 24 2024

புடவையை கொஞ்சம் தூக்கி கட்டுமா! யோவ் கொஞ்சம் சும்மா இருய்யா! கலகலப்பான முபாஸா பிரஸ்மீட்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

முபாசா த லைன் கின் என்ற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் முபாசா திரைப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு தமிழில் வாய்ஸ் கொடுத்த நடிகர்களான அர்ஜுன்தாஸ்,VTV கணேஷ்,சிங்கம்புலி, நாசர்,ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


அந்த பிரஸ் மீட்டில் நடிகர் vtv கணேஷ் மற்றும் சிங்கம்புலி காமெடியா பேசிய விடையங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   பிரஸ்மீட் ஆரம்பத்திலே தொகுப்பாளரை பார்த்து "சேலையை ஏத்தி கட்டுமா தரைய கூட்டுது சிக்கி கீழஏதும் விழுந்துற போறீங்க அப்றம் மனசுக்கு கஷ்ட்டமாகிரும்" என்று தனது கலகலப்பான பேச்சினால் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டார் VTV.கணேஷ். 


பின்னர் பேச ஆரம்பித்த இவர் முபாஸா திரைப்படம் குறித்து பேசினார். சிங்கத்துக்கு வாய் பெருசு லேசா பேசலாம், ஆனா எனக்கு வாய் முன்னால நீளமா இருக்கும் அந்த மைக் உள்ள போய் தான் பேசணும், சிங்கம்புலிக்கு அதுவும் கஷ்ட்டம் வாய் தம்மாத்துட்டுதான் இருக்கும் என்று கூறினார் இதனை கேட்டு அனைவரும் சிரித்துவிட்டார்கள்.


இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர்கள் பேசினர். பின்னர் பேசிய சிங்கம்புலி டிஸ்னில நாங்க நடிச்சதுல ரொம்ப பெருமையா இருக்கு. அங்க இருந்து வந்த செக் கூட பார்க்கும் போது சந்தோசமா இருக்கும் என்று கூறினார். உடனே VTV.கணேஷ் செக் போடலையா அப்ப? அதையுமா வச்சி இருப்பாங்க என்று சொல்கிறார். சும்மா இருய்யா கொஞ்சம் வாய வச்சிட்டு என்று சிங்கம்புலி கூறுகிறார். பிரஸ்மீட்டுக்கு வந்தவர்கள் இவர்கள் செய்யும் ரகலையை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.    


Advertisement

Advertisement