• Dec 25 2024

பிக்பாஸ் வீட்டில் விபரீதம்..! வெளியேற்றப்படுவாரா போட்டியாளர்?

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ்-8 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்துள்ள நிலையில் இனி வரும் டாஸ்குகளை  போட்டியாளர்கள் கடுமையாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று  வழங்கப்பட்ட டாஸ்க்கினால் ராணவிற்கு கை அடிபட்டு விடுகிறது. அதனால் அவர் மருத்துவமனைக்கு  அழைத்து செல்லப்பட்டதாக பிக் பாஸ் அறிவிக்கிறார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகிறார்கள்.இந்நிலையில் அடுத்த அதிரடியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது  


இந்த நிலையில் இந்த வார பிக் பாஸ் கேப்டன் விஷால்" ராணாவுக்கு கையில் அடிபட்டு இருக்கு அடுத்த 3 வாரங்களுக்கு அவர் ரெஸ்ட்ல இருக்கனும்" என்று சொல்கிறார். அன்ஷிதா" உனக்கு அடிபட்டது பொய்னு அப்போ ஒரு டவுட்டுல பேசுனேன் சாரி" என்று சொல்கிறார். அப்போது எழுந்த சவுந்தர்யா" நீ கீழ விழுந்தது கூட பார்க்கணும்னு பண்ணியோனு நினைச்சன்" என்று கூறுகிறார்.

 "d_i_a

இதனை கேட்டு கோபப்பட்ட ராணவ்  "ஒரு விஷயம் பண்ணனும் என்று பண்ணுகிறேன் எல்லாரும் பார்க்கணும் என்று பண்ணவில்லை" என்று கூறுகிறார். பின்னர் ஜெப்ரியிடம் சவுந்தர்யா  நான் சாரி கேட்க எழும்பவே இல்ல அப்படி நடந்தது அவனோட தப்புனு சொல்ல தான் எழும்பினேன் அத அவங்க புரிஞ்சிக்கல" என்று கூறியுள்ளார் இத்தோட இந்த ப்ரோமோ முடிவடைகிறது.


ஜெப்ரி மற்றும் ராணவ் இடையே போட்டி கடுமையான நிலையில், ராணவ் கீழே விழ, அவர் தோள்பட்டையில் அடிபட்டு விடுகிறது. அப்போது அவர் தனக்கு வலிக்கிறது என கத்துகிறார். உடனடியாக ராணவ்வை அருண் மற்றும் விஷால் இருவரும் தூக்கிக்கொண்டு, கன்பக்ஷன் ரூமுக்கு செல்கிறார்கள். அப்போது கூட, வெளியே இருக்கும் சிலர், ராணவ் நடிக்கிறான் என கூறுகின்றனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து வந்த ராணவிக்கு 3 வாரம் ரெஸ்ட் எடுக்குமாறு பிக் பாஸ் அறிவித்தார். இதன் பின்னரே போட்டியாளர்களிடத்தில் இப்படியான வாக்குவாதம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

    

Advertisement

Advertisement