• Dec 26 2024

'நீங்க அன்டர்ஸ்டான்ட்டா..' கூல் சுரேஷிடம் அர்ச்சனா சொன்ன அந்த வார்த்தை! மொத்தமா வெளுத்துப் போன பூர்ணிமாவின் சாயம்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இது தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கில் அவர்கள் தோற்றால் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி உள்ளே வருவார்கள் என கூறப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் போட்டியாளர்களுள் ஒருவரான பூர்ணிமா ரவி, தொகுப்பாளரும், நடிகருமான கமலஹாசனையே குடிகார அங்கிள் என கூறியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இறுதியாக கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், பூர்ணிமாவிடம் கமலஹாசன் கேள்வி எழுப்ப, அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். மேலும், அர்ச்சனாவை பலர் கைதட்டி வரவேற்றது தான்  அவரது குமுறலுக்கும் காரணமாக இருந்தது.


தற்போது கமலையும் விட்டு வைக்காமல் குடிகார அங்கிள் என பிக் பாஸ் வீட்டில் வைத்து பேசியுள்ளார். அதாவது விக்ரமுடன் கமல் தன்னிடம் பேசிய விதம் குறித்து கூறிய பூர்ணிமா, 'நாங்கள் செய்வது புல்லிங் என்றால், அவர்கள் செய்வதும் புல்லிங் தானே, என்ற கேள்விக்கு கமல் எந்த பதிலையும் சொல்லவில்லை என்றும், தன்னுடைய ப்ளாக்கை கூட கமலஹாசன் தவறாக சுட்டிக்காட்டி விட்டார். அதோட, ஆசிரியர் இரண்டு மாணவர்கள் தப்பு செய்யும் போது கண்டித்தா, ஒருவரை பார்த்து ஏன்டா இப்படி செய்தாய் என்றும், இன்னொருவரை பார்த்து இப்படி செய்யாதே என சாதுவாகவும் சொன்னா அது எப்படி நடுநிலை ஆகும்? எனக்கு மனசு ஆறவே இல்ல... நான் முடிவு செஞ்சுட்டேன். என்ன வேணா பண்ணட்டும், நான் பேசுவதை நிறுத்தப் போவதில்லை. நான் இதனால் வெளியே போனாலும் பிரச்சனை இல்லை. நல்ல பெயரோடு வெளியே போக வேண்டும் என்று அவர் கூறினார். இதை தொடர்ந்து அந்த குடிகாரங்கிள் அப்படி சொன்னார்''... என கமல்ஹாசனை சுட்டிக்காட்டி பேசி உள்ளார். 


இந்த நிலையில், பூர்ணிமாவின் போலியான பாசத்தையும் அக்கறையும் உணர்ந்து விட்டார் அர்ச்சனா. இதை பற்றி கூல் சுரேஷிடம் சொல்லிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, அவர்கள் பேசிக் கொண்ட வீடியோ வருமாறு...


Advertisement

Advertisement