• Apr 23 2026

'பிக் பாஸ் பிரதீப்பின் ரசிகை நான்...' வேற லெவலில் ட்ரென்ட்டாகும் வீடியோ!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கில் அவர்கள் தோற்றால் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி உள்ளே வருவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதை நினைவில் வைத்தேஇ தற்போது உள்ள போட்டியாளர்கள் தீயாய் விளையாடி வருகின்றனர்.

எனினும், பிக் பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் மீண்டும் உள்ளே வர வேண்டும் என மக்கள் எதிர் பார்த்தாலும் அதற்கு சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் டீம் கூட இடம் கொடுப்பதாக தெரியவில்லை.


மேலும், பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது மிகப்பெரிய தவறு, பொய் காரணங்கள் சொல்லப்பட்டதால் தான் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது எனவும், இதற்கு யார் பொறுப்பு என்பதையும் யாரும் சொல்ல மறுக்கிறார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் பிரதீப் செல்லும் இடம் எல்லாம் புகழாக தான் உள்ளது. அதன்படி ஏர்போர்ட்டில் வைத்து அவருடைய ரசிகை ஒருவர் வீடியோ ஒன்றை எடுத்து பகிர்ந்துள்ளார்.

தற்போது, குறித்த காணொளி வைரலாகி வருகின்றது. என்ன தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டாலும் அவர் ஏராளமான மக்களை கவர்ந்து உள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Advertisement

Advertisement