• Dec 26 2024

இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்.. நெப்போலியனை விளாசிய பிரபலம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் நெப்போலியன் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அவரால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்றும் அவருக்கு எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கும் என்றும் டாக்டர் காந்தராஜ் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் வில்லன் மற்றும் நாயகன் வேடங்களில் நடித்தவர் நடிகர் நெப்போலியன் என்பதும் அதன் பின்னர் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என்பதும் தெரிந்தது.

நெப்போலியன் மகன் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு சிகிச்சை செய்வதில் நெப்போலியன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் இருப்பினும் அவர் முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் குறித்து அவ்வப்போது பேட்டி அளித்து வரும் டாக்டர் காந்தராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் நெப்போலியன் மகனுக்கு வந்திருப்பது ஒரு அரிய வகை நோய் என்றும் இந்த நோய் உள்ளவர்கள் அதிகபட்சமாக 18 வயது வரை தான் உயிருடன் இருப்பார்கள் என்றும் அவருடைய மகன் 25 வயது வரை உயிருடன் இருப்பதே பெரிய ஆச்சரியம் தான் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்றும் அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று கூறிய டாக்டர் காந்தராஜ், நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்திருப்பது தவறான முடிவு என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால் மருத்துவ ரீதியாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்று கூறப்படவில்லை என்பதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement