• Dec 26 2024

உடம்பு சரியில்லை என சீன் போடும் தங்கமயில்.. கண்டுகொள்ளாத சரவணன்.. மீண்டும் களத்தில் இறங்கும் பாக்கியம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன், செந்தில், கதிர் மற்றும் பழனி மாமா ஆகியோர் மொட்டை மாடியில் படுத்திருக்கும் நிலையில் ராஜி, மீனாவின் அறைக்கு வருகிறார். நான் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன் என்று சொல்ல மீனாவும் சரி என்று சொல்கிறார்.

பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது தான் ராஜி ’நாங்கள் கணவன் மனைவி போல் வாழவில்லை, நான் கட்டிலிலும் கதிர் தரையிலும் படுத்துக் கொள்வார் என்று கூற அதிர்ச்சி அடைந்த மீனா, ‘இன்னுமா உங்களுக்கு காதல் வரவில்லை என்று கேட்கிறார். அதெல்லாம் வரவில்லை கதிர் கஷ்டப்படுகிறான் என்று பரிதாபம் தான் எனக்கு இருக்கிறது என்று சொல்கிறார். இதனை அடுத்து மீனாவிடம் உங்கள் காதல் கதையை சொல்லுங்கள் என்று ராஜி கேட்க அவரும் சந்தோஷமாக தனது மலரும் நினைவுகளை கூறுகிறார்.

இந்நிலையில் சரவணன் இன்னும் தூங்க வரவில்லை என தங்கமயில் மொட்டை மாடியில் போய் பார்த்தபோது அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். பின்னர் கீழே வரும் தங்கமயில் அம்மா பாக்கியத்துக்கு போன் செய்ய, அவரும் இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை, பேசாமல் தூங்கு’ என்று போனை வைத்து விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கமயில் நீண்ட நேரமாக தூங்காமல் இருக்கிறார்.



காலையில் கோமதி தூங்கி எழுந்து வரும்போது இன்னும் யாரும் எழுந்திருக்கவில்லையா என்று கேட்கும் நிலையில் தான் ராஜி மற்றும் மீனா வருகின்றனர். அப்போது அவர்கள் இரவில் நடந்ததை கூற, என்னையும் கூப்பிட்டு இருந்தால் நானும் வந்திருப்பேனே என்று கூறுகிறார்.
 
இந்த நிலையில் தங்கமயில் இன்னும் எழுந்திருக்கவில்லை என கோமதி அவரை எழுப்ப போக தனக்கு தலை வலிக்கிறது என்று கூறுகிறார். அதன் பிறகு சரவணன் வந்து பார்க்கும்போது உடல்நிலை சரியில்லை என்று சீன் போடுகிறார் தங்கமயில். ஆனால் சரவணன் அதை கண்டுகொள்ளாமல் நீ ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

இந்த நிலையில் தங்கமயில் எழுந்திருக்காததால் வீடு கலகலப்பு ஆகவே இல்லை என்று பாண்டியன் சொல்ல கோமதிக்கு மறுபடியும் கோபம் வருகிறது. இந்த நிலையில் தங்கமயில் தனது அம்மாவுக்கு போன் செய்து வீட்டில் நடப்பவற்றை சொல்ல, பாக்கியம் ஆழ்ந்த யோசனையுடன் இருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது. நாளைய எபிசோடில் மீண்டும் பாக்கியம் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement