• Sep 17 2026

இந்தப் படத்தில் இப்படியொரு கதை இருக்கா? எதிர்பார்ப்பை எகிறவைத்த ‘போராட்டம்’ பட ட்ரெய்லர்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ராஜ் சிவராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். ஈழ சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், வெளியான முதல் பார்வையில் பாஸ்கரன் றீகன் உதைப்பந்தாட்ட வீரராக தோன்றியிருந்தார். இதனால் திரைப்படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான முழுநீளத் திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ஈழ சினிமாவுக்கு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘போராட்டம்’, இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் கவனம் பெற்றுள்ளது. திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 'போராட்டம்’ படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் செப்டம்பர் 2 அன்று வெளியாகியுள்ளதுடன், படம் ஒக்டோபர் 2 அன்று வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழத்து கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பு கிடைக்கப்போகிறது என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement