• Dec 26 2024

டேய் செல்லத்துக்கு வழிய விடுங்கடா.. த்ரிஷா முன் பாய்ந்து சூழ்ந்த ரசிகர்கள்! போலீசார் செய்த காரியம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் இன்றைய தினம் பரபரப்பாக வாக்குகள் பதிவாகி வரும் நிலையில், பல்வேறு சினிமா பிரபலங்களும் தமது ஜனநாயக கடமை நிறைவேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சூர்யா, அஜித், குமார், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், திரிஷா, குஷ்பூ, கார்த்திக், தனுஷ் என தமிழ் சினிமாவின் பிரபலங்கள் தமது வாக்கை செலுத்தி, நீங்களும் ஓட்டு போடுங்க என மக்களுக்கும்  தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்வதற்காக வந்த நடிகை த்ரிஷா, தனது வாக்கை போட்ட பின்னர் மீண்டும் திரும்பி செல்லுகையில் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்துள்ளார்.


இதன்போது அங்கிருந்த பெண் போலீஸ் காவலர்கள்  அவரை பத்திரமாக கூட்டிக்கொண்டு சென்றுள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


இதேவேளை நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் அவர் செல்லும் போது அஜித் குமாரை பார்த்து கத்தி கூச்சலிட்டு உள்ளார்கள். இதன் போது அவர் தனது காதுகளை மூடிக்கொண்டு சென்ற காட்சியும் இன்றைய தினம் பரபரப்பாக பேசப்பட்டது.

Advertisement

Advertisement