• Dec 26 2024

எனது தனிப்பட்ட வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! 'புல்லி கேங்' தொடர்பில் ரச்சிதா போட்ட பதிவு! சரியான செருப்படி..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்றாலும்  தப்பான ரூட்டில் பயணிப்பதாகவே ரசிகர்கள் எண்ணுகின்றனர். அதை சரியென கூறும் வகையில் மாயா, பூர்ணிமா செயற்படும் விதம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

பிக்பாஸ் போட்டியிலிருந்து ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனிக்கு வெளியில் ரசிகர்கள் அதிகம் இருந்ததால், மாயா அவரை தன் டீமில் வைத்து கொண்டு ஒரு கட்டத்தில் பிரச்னை மொத்தத்தையும் அவர் பக்கம் திருப்பினார். இதனால் அவர் தன்பக்கமுள்ள நியாயத்தை சொல்லக் கூட முடியாமல் வெளியேறியுள்ளார். அதே ரூட்டை பிக் பாஸ் வீட்டிலுள்ள ஏனைய ஆண்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் இருக்கிறார்கள் மாயாவின் புள்ளி கேங்.


மேலும், மாயாவும் பூர்ணிமாவும் ரகசியமாக பேசும் போது,  இந்த வாரம் தினேஷ் கேப்டனா வந்தா காலி தான். தினேஷை நாம் பேசி ஜெயிக்க முடியாது. அவரை நம்ம சைடில் வச்சிக்க வேண்டும். டம்மியா வச்சு நமக்காக மட்டுமே பேச வைக்க வேண்டும். அத்துடன், அவர் மனைவி ரச்சிதாவ வச்சி தான் அவர எமோஷனலாக பேச வைக்கணும், பிறகு நாங்க ஆறுதல் சொல்லலாம் என்கிறார் மாயா. அதற்கு ஓகே செய்யலாம் என்கிறார் பூர்ணிமா. 


இந்த நிலையில், இதை குறித்து பதிவொன்றை பகிந்துள்ளார் தினேஷின் மனைவி ரச்சிதா. குறித்த பதிவில், 

'என் வாழ்க்கை ஒரு பொது பிரச்சனை அல்ல. ஒவ்வொருவரும் அதைப் பற்றி விவாதிக்க.. இங்கே உள்ள ஒவ்வொருவரும் அவரவர் பாதையில் தனியாக செல்கின்றனர்.. இது எனது தனிப்பட்ட வாழ்க்கை..எனக்கு தெரிந்த முகங்களுக்கு அல்லது ஊடகங்களுக்கு நான் பிரபலமாக தெரிவது ரகசியமில்லை. ஆனால் அதை வைத்து உங்கள் மோசமான வணிகத்தை பரப்பாதீர்கள். ஒருவர் பல அதிர்ச்சிகளுக்கு ஆளாக முடியாது.. எல்லாம் முடிந்துவிட்டது. யாரும் என்னையோ அல்லது எனது தனிப்பட்ட வாழ்வில் யாரும் குறுக்கிடுவதை நான் அனுமதிக்கவே மாட்டேன்.  எங்களின் தனியார் பிரச்சனைகளை எடுத்து அவதூறு செய்ய திட்டமிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியான பேச்சுக்களை விளையாட்டாக பயன்படுத்துகின்றனர். பிக் பாஸ் வீட்டில்  இது தான் நீங்கள் விளையாட விரும்பும் வெட்கக்கேடான விளையாட்டா? இந்த மட்டமான திட்டங்களை விட்டு நேர்மையாக விளையாடுங்கள் புல்லி கேங்' என பதிவிட்டுள்ளார் மகாலட்சுமி ரச்சிதா பதிவிட்டுள்ளார்.



 


 

Advertisement

Advertisement